யாழ்.கோண்டாவில் றோ.க.த.க பாடசாலையின் பரிசில்தின நிகழ்வு-2024 நாளை வெள்ளிக்கிழமை (12.07.2024) காலை-09 மணி முதல் மேற்படி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் யாழ்ப்பாணம் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கனகசபை சுவீதன் பிரதம விருந்தினராகவும், தொழிலதிபர் செல்லத்துரை திருமாறன், யாழ்ப்பாணம் வலய ஆரம்பக் கல்விப் பிரிவு ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் திருமதி.கலாநாயகி சோதிதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், பழைய மாணவிகளான திருமதி.செல்லத்துரை பரமேஸ்வரி, திருமதி.ஸ்ரீவரன் ரதிபாலினி ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.