'நல்லூர்ச் சிவன்' என அழைக்கப்படும் நல்லூர் ஸ்ரீகமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி ஆலய ஆனித் திருமஞ்சன உற்சவம் ஆனி உத்தர நாளான நாளை வெள்ளிக்கிழமை (12.07.2024) அதிகாலை-02 மணியளவில் விசேட திரவிய அபிஷேகத்துடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.
நாளை அதிகாலை-05 மணியளவில் விசேட வசந்தமண்டபப் பூசை, உதயத்தின் முன் ஆனி உத்தர தரிசனம், உள்வீதி, வெளிவீதி உற்சவத்தைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கல் இடம்பெறும்.