சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைந்த முப்பது சமூக மட்ட அமைப்புக்கள்!

 


"சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைவோம்" எனும்   தொனிப் பொருளில் நாளை திங்கட்கிழமை(08.07.2024) தென்மராட்சி தழுவிய ரீதியில் இடம்பெறவுள்ள பூரண கடையடைப்பிற்கும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனை முன்பாக இடம்பெறவுள்ள மாபெரும்  கண்டன எதிர்ப்புப் போராட்டத்திற்கும் தென்மராட்சி சமூகப் பொது அமைப்புக்களின் ஒன்றியம் தமது பூரண ஆதரவைக் கூட்டாக வெளியிட்டுள்ளது.

.சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் கழகம், கொடிகாமம் வர்த்தக சங்கம், தனியார் சிற்றூர்திச் சேவைச் சங்கம்- தென்மராட்சி, முச்சக்கரவண்டிச் சங்கம்- சாவகச்சேரி, முச்சக்கர வண்டிச் சங்கம்- கொடிகாமம், முச்சக்கரவண்டிச் சங்கம்- கைதடி, தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம்- தென்மராட்சி, கடற்றொழில் சங்கம்- கச்சாய், லிகோரியார் கடற்றொழில் சங்கம்- சாவகச்சேரி, சிகையலங்கரிப்பாளர் சங்கம்- தென்மராட்சி, சலவைத் தொழிலாளர் சமாசம்- தென்மராட்சி,  சனசமூக நிலையங்களின் ஒன்றியம்- தென்மராட்சி, கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம்- தென்மராட்சி, மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஒன்றியம், பனை-தென்னை கூட்டுறவுச் சங்கத் தொழிலாளர்களின் சமாசம், .கமக்காரர் அமைப்புக்களின் ஒன்றியம்- தென்மராட்சி, சிறுதொழில் முயற்சியாளர் ஒன்றியம்- தென்மராட்சி, குடிசைக் கைத்தொழில் மேம்பாட்டு இணையம்- தென்மராட்சி, .சந்தை வியாபாரிகள் சங்கம்- சாவகச்சேரி, சந்தை வியாபாரிகள் சங்கம்- கொடிகாமம், நகர வரியிறுப்பாளர் ஒன்றியம்- சாவகச்சேரி, மீன்சந்தை வியாபாரிகள் ஒன்றியம்- சாவகச்சேரி, மின்னியலாளர் சமாசம்- சாவகச்சேரி, இளைஞர் கழகங்களின் சம்மேளனம்- தென்மராட்சி, விளையாட்டுக் கழகங்களின் சமாசம்- தென்மராட்சி, கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவுறவுச் சங்கம்- தென்மராட்சி, தனியார் பேக்கரி உற்பத்தியாளர் சங்கம்- தென்மராட்சிக் கிளை, உணவக உரிமையாளர் சங்கம்- சாவகச்சேரி, முன்பள்ளி ஆசிரியர்கள் இணையம்- தென்மராட்சி, உள்ளூர்ப் பழமர உற்பத்தியாளர் சங்கம்-  கொடிகாமம் ஆகிய முப்பது சங்கங்கள் இவ்வாறு தமது ஆதரவை வெளியிட்டுள்ளன. 

இன்று ஞாயிற்றுக்கிழமை (07.07.2024) அவர்கள் கூட்டாக கூட்டாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.   

இந்தப் போராட்டத்தில் எமது சமூகப் பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கெடுப்பார்கள். தென்மராட்சியில் உள்ள சிறிய வியாபாரிகள் முதல் பாரிய வர்த்தகர்கள் மற்றும் அனைத்துத் தொழில் அமைப்புக்களும் பூரணப் பங்களிப்பை வழங்குவோம் என்பதை உரிமையோடு தெரிவித்துக் கொள்கின்றோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது