சுன்னாகம் மயிலணிக் கந்தசுவாமி மஹோற்சவப் பெருவிழா ஆரம்பம்



சுன்னாகம் மயிலணிக் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்றுத் திங்கட்கிழமை (01.07.2024) முற்பகல்-10 மணியளவில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் பன்னிரெண்டு தினங்கள் காலை, மாலைத் திருவிழாக்களாக இடம்பெறவுள்ள மேற்படி ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-07 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை-06 மணியளவில் கைலாசவாகனத் திருவிழாவும், 10 ஆம் திகதி புதன்கிழமை பகல் வேட்டைத் திருவிழாவும், அன்றையதினம் மாலை சப்பரத் திருவிழாவும், 11 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், மறுநாள்-12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை-09 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை-05 மணியளவில் கொடியிறக்கத் திருவிழாவும் நடைபெறும்.