பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டமும் தைத்த சீருடை வழங்கலும்

 


யாழ்.மல்லாகம் மகாவித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கப் பொதுக் கூட்டமும் மாணவர்களுக்குத் தைத்த சீருடை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நாளை புதன்கிழமை (03.07.2024) காலை-09 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி பாடசாலை அதிபர் சி.கணேசராசா தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி.மேசி சேவியர் பிரதம விருந்தினராகவும், மல்லாகம் மக்கள் மன்றத்தின் கனடாக் கிளையைச் சேர்ந்த கருணாகரன் கஜகரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.