எதிர்வரும் ஆவணி மாதம்-04 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் நெடுவூர்த் திருவிழாவை மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை முன்னிட்டு மலர் வெளியீட்டுக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன. ஆக்கங்களை நாளை புதன்கிழமைக்கு (31.07.2024) முன்னர் delftdoc@gmail.com எனும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.