ஜனாதிபதி அலுவலகத்தினால் கோரப்பட்ட சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் சார்பாக முன்மொழிவுகள் சம்பந்தமான அவசர கலந்துரையாடல் வடமாகாணக் கீழ் உழைப்பு பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை புதன்கிழமை (31.07.2024) மாலை-03 மணியளவில் 21/4, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள மேற்படி சங்கத்தின் பணிமனையில் நடைபெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்கு வருகை தரும் சகல கீழ் உழைப்புப் பட்டதாரிகளும் www.presidentsoffice.gov.lk எனும் ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் பூரணப்படுத்தி குறித்த கலந்துரையாடலின் போது சமர்ப்பிக்குமாறும், மேலதிக தகவல்களுக்கு 0741011101, 0779967142 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் வடமாகாணக் கீழ் உழைப்பு பட்டதாரிகள் சங்க நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.