கீரிமலையில் மாபெரும் இரத்ததான முகாம்


நாட்டில் நிலவிவரும் குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு கருகம்பனை தமிழ்மன்ற சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் கழகம், இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை  ஞாயிற்றுக்கிழமை (28.07.2024) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை கீரிமலை கருகம்பனை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைத்துத் தன்னார்வ குருதிக் கொடையாளர்களையும், ஆர்வலர்களையும் கலந்து கொண்டு இரத்ததானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.