அச்சுவேலியில் அர்ச்சனைப் பூக்கள் வெளியீட்டு விழா

அச்சுவேலிக் காட்டுவளவு கந்தசுவாமி மீது பா.அர்ச்சனாவால் எழுதிப் பாடப்பட்ட 'அர்ச்சனைப் பூக்கள்' எனும் இசைப்பேழையின் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை (03.07.2024) இரவு-09.15 மணிவல்வில் அச்சுவேலி காட்டுமலைக் கந்தசுவாமி ஆலய முன்றலில் மன்னார் வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞான.ஆதவன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை அதிபர் ச.சத்தியவரதன் மற்றும் இலங்கைத் திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் தயாளினி குமாரசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.