குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகருக்கு நாளை தேர்த் திருவிழா

குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை வியாழக்கிழமை (04.07.2024) முற்பகல்-10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முற்பகல்-11 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு-07.30 மணியளவில்  கொடியிறக்கத் திருவிழாவும் இடம்பெறுமென மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.