தேசப் பற்றாளர் முருகப் பெருமானின் இறுதி யாத்திரை நாளை

யுத்த நெருக்கடியான காலப் பகுதியில் வன்னி மண்ணில் பல வலிகளைச் சுமந்து பணியாற்றியவரும், சக்தி தொலைக்காட்சியில் தற்போது கடமையாற்றி வருபவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் மதிவாணனின் தந்தையார் தேசப்பற்றாளர் கதிர்காமு முருகப் பெருமான் (முன்னாள் காங்கேசன்துறை 769 வழித்தட நேரக் காப்பாளர் மற்றும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையப் பிரதான நேரக் காப்பாளர்) கடந்த வெள்ளிக்கிழமை (28.06.2024) அதிகாலை தனது 82 ஆவது வயதில் காலமானார்.

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், இடைக்கட்டு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை (04.07.2024) மாலை-03 மணியளவில் இடைக்கட்டு, வள்ளிபுனத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று மாலை-04 மணியளவில் பூதவுடல் வள்ளிபுனம் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுத் தகனம் செய்யப்படுமென அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.