சம்பந்தனின் பூதவுடல் யாழில் மக்கள் அஞ்சலிக்கு


மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் நாளை வியாழக்கிழமை (04.07.2024) யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படவுள்ளது.

நாளை காலை-09 மணி முதல் முற்பகல்-10 மணி வரை யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அஞ்சலிக்காகப் பூதவுடல் வைக்கப்படும்

அதனைத் தொடர்ந்து நாளை முற்பகல்-10:30 மணி முதல் மாலை-04 மணி வரை யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா கலையரங்கில் அவரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.