நயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் ஆலயக் குரோதி வருட மஹோற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை (12.07.2024) பிற்பகல்-12.05 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
எதிர்வரும்-20 ஆம் திகதி சனிக்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், 22 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் மாலை கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.