மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் வருடாவருடம் நடாத்தும் "மாதகல் பெரும் சமர்" என வர்ணிக்கப்படும் வீரா மென்பந்துக் கிரிக்கட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி-2024 நாளை ஞாயிற்றுக்கிழமை (14.07.2024) பிற்பகல்-02 மணியளவில் மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத் தலைவர் சி.ஞானபண்டிதன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் மாதகல் நலன்புரிச் சங்கத் தலைவர் வி.சிற்றம்பலம் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்வார்.