சாவகச்சேரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் அடையாளக் கடையடைப்பும்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காகச் செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகளுக்கு எதிராகவும், வைத்தியசாலையின் பணிகள் உடன் வழமைக்குத் திரும்ப வேண்டுமெனக் கோரியும் நாளை மறுதினம் திங்கட்கிழமை (08.07.2024) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் அடையாளக் கடையடைப்பும் முன்னெடுக்கப்படவுள்ளது.            

கண்டன ஆர்ப்பாட்டம் காலை-08 மணியளவில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பமாகும். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக அனைவரையும் அணிதிரளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் விடுத்த அறிவிப்பில் அழைப்பு விடுத்துள்ளனர்.