ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

'ஏழாலை' எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் ஒன்றான ஏழாலை புங்கடி புவனேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (29.07.2024) முற்பகல்-10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.    

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலைத் திருவிழாக்களாக இவ் ஆலய மஹோற்சவம் நடைபெற உள்ளது.

இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-05 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு-7 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணியளவில் தேர்த் திருவிழாவும், ஆடிப் பூரத் தினமான 07 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் இரவு-7 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென மேற்படி ஆலய நிர்வாகசபையினர் தெரிவித்துள்ளனர்.

(செ.ரவிசாந்)