யாழ்.சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் பரிசளிப்பு விழாவும் நாளை வெள்ளிக்கிழமை (02.08.2024) காலை-08.30 மணி முதல் மேற்படி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தான் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பொறியியலாளர் நாகேந்திரன் நவரூபன் பிரதம விருந்தினராகவும், உடுவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோ.இராமநாதன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். நிகழ்வில் நினைவுப் பேருரையும் இடம்பெறும்.