யாழ்.பண்ணாகம் வடக்கு அ.மி.த.க.பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 152 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒன்றுகூடல் நிகழ்வு நாளை சனிக்கிழமை (03.08.2024) காலை-09 மணி முதல் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி பாடசாலையின் அதிபர் திருமதி.அபிராமி சிவபவன் தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த ஒன்றுகூடல் நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர், பெற்றோர், ஆசிரியர் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தினர் அழைத்துள்ளனர்.