ஏழாலைச் சிவனின் மஹோற்சவம் ஆரம்பம்

'ஏழாலைச் சிவன்' என அழைக்கப்படும் ஏழாலை புங்கடி சொர்ணாம்பிகை சமேத உடனுறை அம்பலவாணேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்று முன்தினம் புதன்கிழமை (03.06.2024) முற்பகல்-10.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் பகல், இரவுத் திருவிழாக்களாக இவ் ஆலய மஹோற்சவம் நடைபெறும். எதிர்வரும்-10 ஆம் திகதி புதன்கிழமை இரவு-08 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 11 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல்-10.30 மணியளவில் தேர்த் திருவிழாவும், ஆனி உத்தர நாளான மறுநாள்-12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல்-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.