ஆடிப்பிறப்பு விழாவை முன்னிட்டு சண்டிலிப்பாயில் மாணவர்களுக்கான போட்டிகள்

ஆடிப்பிறப்பு விழாவினை முன்னிட்டுச் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகம் நடாத்தும் மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பாடல் போட்டிகள் நாளை திங்கட்கிழமை(15.07.2024) சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளன.

ஆடிப்பிறப்புப் பாடல் போட்டியில் தரம்-03,04,05 மாணவர்கள் பங்குபற்ற முடியும். தரம்-06, 07,08 மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி 'நவாலியூர் சோமசுந்தரப் புலவர்' எனும் தலைப்பில் 150 சொற்களைக் கொண்டதாகவும், தரம்-09, தரம்-10 மற்றும் தரம்-11 மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி 'ஆடிப்பிறப்புப் பண்டிகையும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரும்' எனும் தலைப்பில் 250 சொற்களைக் கொண்டதாக இடம்பெறும்.

பாடல் போட்டி திங்கட்கிழமை பிற்பகல்-02.30 மணிக்கும், கட்டுரைப் போட்டி பிற்பகல்-03.30 மணிக்கும் ஆரம்பமாகி நடைபெறும். சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் குறித்த போட்டிகளில் பங்குபற்றலாம்.

போட்டிகளில் வெற்றியீட்டும் மாணவர்களுக்கான பரிசில்கள் எதிர்வரும்-17 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆடிப்பிறப்பு நிகழ்வில் வைத்து வழங்கப்படும். மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையும் வண்ணம் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.