சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகராகப் பதவி வகித்த மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா நாளை திங்கட்கிழமை (15.07.2024) காலை மீண்டும் மருத்துவமனைக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் உறுதியாகியுள்ளது.
புதிய பதில் அத்தியட்கராக மருத்துவர் கோபாலமூர்த்தி ரஜீவ் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த நியமனம் முறையற்றது என மருத்துவர் அர்ச்சுனா வெளியிட்ட காணொளியொன்றின் மூலம் தெரிவித்திருந்தார். மருத்துவர் அர்ச்சுனாவுக்கு மக்களின் ஆதரவு அதிகமாகக் காணப்படும் நிலையில் நாளை மீண்டும் மருத்துவர் அர்ச்சுனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் செல்லவிருப்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.