குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகரின் கிராம ஊர்வலம்

குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டுக் கிராம ஊர்வலம் நாளை வியாழக்கிழமை (22.08.2024) பிற்பகல் -02 மணியளவில் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதுதொடர்பில் இன்று இரவு கிராமம் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புப் பணி முன்னெடுக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.