சந்நிதியானின் தேர், தீர்த்தத் திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கானவர்களின் பசிப்பிணி போக்கிய சந்நிதியான் ஆச்சிரமம்

 



வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ  செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழாவான கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (18.08.2024), தீர்த்தத் திருவிழாவான திங்கட்கிழமையும் (19.08.2024) நடைபெற்ற போது இரு தினங்களிலும் சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் ஆச்சிரம மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் பசிப்பிணி போக்கும் அன்னதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளின் நேரடி நெறிப்படுத்துதலில் ஆச்சிரமத் தொண்டர்கள் குறித்த பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவை உறுப்பினர்களும் கலந்து கொண்டு அன்னதானப் பணிகளுக்கான தமது ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர்.

(செ.ரவிசாந்)