கரவெட்டியில் நாளை மாபெரும் விசேட இலவசக் கருத்தரங்கு

யாழ்.விக்னேஸ்வரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமராட்சிக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கான கணக்கீடு பாடத்திற்கான மாபெரும் விசேட இலவசக் கருத்தரங்கு நாளை வெள்ளிக்கிழமை (23.08.2024) காலை-08 மணி முதல் கரவெட்டியிலுள்ள மேற்படி கல்லூரியின் சிவபாதசுந்தரம் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கருத்தரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புக்கள் பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி வளவாளராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

குறித்த கருத்தரங்கில் வடமராட்சிக் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களையும் கலந்து பயன் பெறுமாறு கருத்தரங்கு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள்  கேட்டுள்ளனர்.