நல்லூர்க் கந்தன் பெருந் திருவிழாக் கால ஆன்மீக அருளுரை

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலத்தில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் ஆன்மீக அருளுரை  நல்லூரிலுள்ள சிவகுரு ஆதீன வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதன்படி, இன்று புதன்கிழமை (21.08.2024) இரவு-08 மணியளவில் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் 'முத்தி நிலை' எனும் தலைப்பில் ஆன்மீக அருளுரை ஆற்றுவார். (66)