யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துமன்றம் நடாத்தும் 'இந்துநெறி பொன்விழா' சிறப்பு மலர் வெளியீட்டு விழா நாளை புதன்கிழமை (21.08.2024) பிற்பகல்-02 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்துமன்றத் தலைவர் க.கஜன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட இந்துநாகரிகத் துறைப் பேராசிரியர் ச.முகுந்தன் கலந்து கொண்டு நூலின் வெளியீட்டுரையை நிகழ்த்துவார்.