செல்வச்சந்நிதி முருகனின் பெருவிழா இன்று ஆரம்பம்

 


'அன்னதானக் கந்தன்' எனப் போற்றிச் சிறப்பிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் குரோதி வருட மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (04.08.2024) மாலை- 06.15 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்தும் 16 தினங்கள் இவ் ஆலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறும். எதிர்வரும்-13  ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-09 மணியளவில் பூங்காவனத் திருவிழாவும், 14 ஆம் திகதி புதன்கிழமை காலை-08 மணியளவில் கைலாசவாகனத் திருவிழாவும், 17 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-07 மணியளவில் சப்பரத் திருவிழாவும், 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-08 மணியளவில் தேர்த் திருவிழாவும், ஆவணிப் பூரணை தினமான மறுநாள்-19 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-08 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றைய தினம் மாலை-06.30 மணியளவில் மெளனத் திருவிழாவும் இடம்பெறும்.

இதேவேளை, மேற்படி ஆலய மஹோற்சவப் பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மஹோற்சவ காலங்களில் தினமும் சந்நிதியான் ஆச்சிரமம் உட்பட ஆலயச்  சுற்றாடலில் அமைந்துள்ள அன்னதான மடங்களில் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   

(செ.ரவிசாந்)