மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கைப் பிரகடனம் வெளியீடு இன்று

இடதுசாரி, முற்போக்கு ஜனநாயகச் சக்திகள், காலிமுகத் திடல் அரகலய மக்கள் போராட்டத்தில் முன்நின்ற மக்களுக்கான.சமூக விடுதலைச் சக்திகள் ஒன்றிணைந்து தோற்றுவித்த ஐக்கிய அமைப்பான மக்கள் போராட்ட முன்னணியின் கொள்கைப் பிரகடனம் வெளியிடும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (04.08.2024) மாலை-03.30 மணியளவில் யாழ்.றிம்மர் மண்டபத்தில் இடம்பெறும்.

இந் நிகழ்வில் மக்கள் போராட்ட  முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சட்டத்தரணி நுவன் போபகே, புதிய ஜனநாயக மாக்சிச  லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல், முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, சோசலிச மக்கள் மன்றத்தின் சுவஸ்திகா அருலிங்கம், அரகலயப் போராட்டத்தின் பிரதிநிதி ராஜ்குமார் ரஜீவ்காந், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் பிரசாந்தினி பிரதீபன், சோசலிச மக்கள் மன்றத்தின் லங்கா பேலி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.