மாவைக் கந்தன் தேர்த் திருவிழாவில் அடியவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அலங்காரப் பறவைக் காவடி!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தக் காம்யோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா நேற்றுச் சனிக்கிழமை (03.08.2024) வெகுசிறப்பாக இடம்பெற்றது.       

இரு சித்திரத் தேர்களும் ஆலய வடக்கு வீதியைச்  சென்றடைந்த போது மாவிட்டபுரத்தைச் சேர்ந்த 38 வயதான இளம் குடும்பஸ்தரொருவர் மாவைக் கந்தப் பெருமானின் அருள் வேண்டித் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்திலிருந்து அலங்காரப் பறவைக் காவடி எடுத்து ஆடி வந்த காட்சி ஆலயத்தில் திரண்டிருந்த அடியவர்கள் பலரதும் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. 

(செ.ரவிசாந்)