யாழ்.மாவட்டச் செயலகம் நடாத்தும் யாழ்.மாவட்ட உணவுத் திருவிழாவும் விற்பனைக் கண்காட்சியும் இன்று திங்கட்கிழமை (05.08.2024) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமாகிறது.
நாளை மறுதினம் புதன்கிழமை (07.08.2024) வரை இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மூன்று தினங்களிலும் மாலை மற்றும் இரவு வேளைகளில் கலாசார மற்றும் இசை நிகழ்வுகள் இடம்பெறவுள்ள மையும் இங்கு குறிப்பிடத்தக்கது.