சுன்னாகம் மயிலணி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஆடிச் செவ்வாய் உற்சவம்

'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மூன்றாம் ஆடிச் செவ்வாய் உற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (06.08.2024) மாலை-04 மணியளவில் அபிஷேகத்துடன் ஆரம்பமாகிச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.  

அபிஷேகம், பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மாலை-05.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி, வெளிவீதி உலா வரும் திருக் காட்சியும் இடம்பெறுமென மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.நா.சிவசங்கரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.