யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பரிசுத் தின நிகழ்வு-2024 நாளை வெள்ளிக்கிழமை (30.08.2024) காலை-08 மணி முதல் மேற்படி கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மேற்படி கல்லூரியின் அதிபர் இ.செந்தில்மாறன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இதயச் சிகிச்சை நிபுணரும், பழைய மாணவருமான பூ.லக்ஸ்மன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.