சிறிலங்கா அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை (30.08.2024) நண்பகல்-12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடாத்தப்படவுள்ளது.
அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.