மயிலணி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பிக்கப்படவுள்ள ஆடிப்பூர உற்சவம்

'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர உற்சவம் நாளை புதன்கிழமை (07.08.2024) சிறப்பாக நடைபெறவுள்ளது.  

நாளை காலை-07.30 மணியளவில் விசேட அபிஷேகம், பூசை என்பன ஆரம்பமாகும்.  அதனைத் தொடர்ந்து காலை-08.30 மணியளவில் சுன்னாகம் மகாகாளி அம்மன் ஆலயத்திலிருந்து பாற்காவடிகள்  ஆரம்பமாகி ஊர்வலமாக ஆலயத்தை வந்தடைந்து பாலாபிஷேகம் நடைபெறும். அம்பாளுக்கு ருதுசாந்தி, மங்கள பூசை என்பன இடம்பெறும். அதனைத் தொடர்ந்து முற்பகல்-11.30 மணியளவில்  அம்பாள் உள்வீதி,வெளி வீதி உலா வரும் திருக்காட்சி இடம்பெற்றுத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கலும் இடம்பெறும்.  

இதேவேளை, பாற்காவடி எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்ற விரும்பும் அடியவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே ஆலயத்தில் பதிவு செய்யுமாறு மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.நா.சிவசங்கரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.