தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கிறார் அரியநேந்திரன் !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் களமிறங்கஉள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை புதன்கிழமை (07.08.2024) யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ளது. இதற்காக அரியநேந்திரன் யாழ்ப்பாணம் நோக்கி விரைந்து வருவதாகவும் தெரியவருகின்றது.