இணுவில் சிவகாமி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டுக் கற்பூரத் திருவிழா

இணுவில் சிவகாமி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை (07.08.2024) கற்பூரத் திருவிழா இடம்பெறவுள்ளது.

நாளை காலை-07 மணியளவில் 1008 சங்காபிஷேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து முற்பகல்-10 மணியளவில் பூசை இடம்பெறும். நாளை மாலை-05 மணியளவில் பூசையைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை இடம்பெற்றுத் தொடர்ந்து வெளிவீதி உலாவின் போது கற்பூரத் திருவிழா நடைபெறும்.