நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ்.மாநகர சபையின் சைவசமய விவகாரக் குழுவின் ஏற்பாட்டில் நல்லைக்குமரன் மலரின் 32 ஆவது இதழ் வெளியீட்டு விழாவும், யாழ் விருது வழங்கும் நிகழ்வும் நாளை வியாழக்கிழமை (15.08.2024) காலை-09 மணி முதல் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்.மாநகரசபையின் ஆணையாளர் ந.கிருஷ்ணேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.