யாழ்.வடமராட்சி கிழக்கு நாகர் கோயில் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் ஏழாம் நாள் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்றுச் சனிக்கிழமை (24.08.2024) சிறப்பாக இடம்பெற்றது.
மாம்பழத் திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட ஒரு மாம்பழம் ஏழு லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இது மாம்பழத் திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து அடியவர்களினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.