மயிலணி முத்துமாரி அம்மனின் கும்பாபிஷேக தின உற்சவம்

'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக தின உற்சவம் நாளை வியாழக்கிழமை (05.09.2024) சிறப்பாக நடைபெறவுள்ளது.

நாளை மாலை-03 மணி முதல் 108 சங்காபிஷேகம், விசேட பூசை வழிபாடுகள் என்பன இடம்பெறும். அதனைத் தொடர்ந்து அம்பாளின் திருவீதி உலா நடைபெறுமென ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.நா.சிவசங்கரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.