பருத்தித்துறைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்கள் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களின் வழக்கு வெள்ளிக்கிழமை (06.09.2024) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பொன்னுத்துரை கிரிஷாந்தன் முன்னிலையில் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது பத்து இந்திய மீனவர்கள் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒன்பதுமாத சிறைத் தண்டனை என்ற நிபந்தனை அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டதுடன் படகோட்டியான மற்றொரு மீனவர் பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாதச் சிறைத் தண்டனை என்ற நிபந்தனை அடிப்படையிலும் விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை, குறித்த 11 இந்திய மீனவர்களும் கடந்த ஓகஸ்ட் மாதம்-23 ஆம் திகதி வடமராட்சி பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.