சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரால் நடாத்தப்படும் பாரம்பரிய உணவுத் திருவிழா நாளை திங்கட்கிழமை (09.09.2024) காலை-09 மணி தொடக்கம் மாலை-04 மணி வரை சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
குறித்த நிகழ்வில் பாரம்பரிய உணவுகளான தோசை, அப்பம், ஒடியல் கூழ், குரக்கன் ரொட்டி, பலகார வகைகள், பழங்கள், இளநீர், தானிய வகைகள் மற்றும் மதிய உணவுகள் முயற்சியாளர்களால் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே, நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பார்வையிடுவதுடன்முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து ஊக்குவிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.