வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையில் வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகமும், பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் வடமராட்சி கிழக்குப் பிரதேசப் பண்பாட்டுப் பெருவிழா-2024 நாளை செவ்வாய்க்கிழமை (03.09.2024) காலை-09 மணி முதல் மருதங்கேணிக் கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மருதங்கேணிப் பிரதேச செயலாளரும், பிரதேச கலாசாரப் பேரவைத் தலைவருமான குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகவும், வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஜ், வடமாகாண மோட்டார்ப் போக்குவரத்துத் திணைக்கள ஓய்வுநிலை ஆணையாளர் வல்லிபுரநாதர் பத்மநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், யாழ்.மாவட்டச் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணாலினி விஜயரத்தினம், மூத்த கலைஞர்களான செல்லையா பரமானந்தம், அந்தோனிப்பிள்ளை பிலிப்பையா ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்வர்.