உடுப்பிட்டியில் சிறுகதைப் புத்தகம் வெளியீட்டு நிகழ்வு

நவமகனின் ஆகிதம் சிறுகதைப் புத்தகம் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை (20.09.2024) மாலை-03.30 மணி முதல் கலைமகள் வீதி, உடுப்பிட்டி இமையாணன் பகுதியில் அமைந்துள்ள கல்வி, கலைப் பண்பாட்டு வளாகத்தில் நடைபெறவுள்ளது.

எழுத்தாளர் தானா விஷ்ணு தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் எழுத்தாளர்களான நவமகன், யாத்திரிகன், கருணாகரன், இராஜேஸ்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரைகள் ஆற்றவுள்ளனர். தோழர் நீலகண்டன் சிறப்புரை நிகழ்த்துவார்.