நல்லூரில் தியாகதீபம் திலீபன் நினைவாக மாபெரும் இரத்ததான முகாம்

தியாகதீபம் திலீபனின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு அவரின் நினைவாகத் தியாகதீபம் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (22.09.2024) காலை-09 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை நல்லூரிலுள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் நடைபெறவுள்ளது. 

குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணிக்குப் பங்களிப்பு வழங்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.