கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளில் மூன்று வினாக்களை நீக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.