தமிழ்க் கடலை தமிழரே ஆள வேண்டும் - தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் விளக்கம்

 


தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்க் கடலில் தமிழ் மீனவர்களுடைய கடல் இறைமை உறுதி செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது இந்திய தமிழ் மீனவ மக்களையும் சேர்த்து சொல்லப்படுகின்றது என்கிற கருத்து சில ஊடகங்களில் முன்வைக்கப்பட்டிருந்தது. 

அது தொடர்பில் விளக்கமளித்த வடமராட்சி வடக்கு கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் முன்னாள் உபதலைவரான நா. வர்ணகுலசிங்கம்,

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஈழத்தமிழ் மக்களின் இறையாண்மைக்கு உட்பட்ட கடலை தான்  தமிழ் கடல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தமிழ் மீனவர்களை அதில் சேர்த்து பேசவில்லை. ஈழத்தமிழ் மீனவர்களை பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 

பொத்துவில் தொடக்கம் மன்னார் வரை தமிழர் ஆளுகின்ற கடல் தான் உள்ளது. இலங்கையில் இரண்டு சட்டம் இன்று அமுலில் உள்ளது. தென்னிலங்கையில் ஒரு சட்டம், வடக்கு கிழக்கில் ஒரு சட்டம்.    இன்று எங்களின் இறையாண்மைக்கு உட்பட்ட  கடலில் உள்ள வளங்கள் முற்றாக சூறையாடப்படுள்ளது. இதனால் தான் தமிழ்க் கடலை தமிழரே ஆள வேண்டும் என கேட்கிறோம். 

சட்டவிரோதமான தொழில்கள் கடலில் அதிகரித்துள்ளன. எங்களின் கடல் வளம் அந்நியநாடுகளுக்கு விற்கப்பட்டுள்ளது. எம் மீனவ மக்கள் கடலை விட்டு அந்நியப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

கடலை பாதுகாக்க வேண்டிய அரசியல்வாதிகள்,  அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் விலைபோயிருக்கிறார்கள்.   என்றார்.