150 ஆவது அஞ்சல் தினத்தை முன்னிட்டுக் காங்கேசன்துறை தபாலகம் நடாத்திய குருதிக்கொடை முகாம் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (14.10.2024) காங்கேசன்துறை தபாலகத்தில் அஞ்சல் அதிபர் திருமதி.சுதாகரன் சசிகலா தலைமையில் நடைபெற்றது.
இக் குருதிக் கொடை முகாம் நிகழ்வில் தபால் ஊழியர்கள், காங்கேசன்துறைப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் குருதிக் கொடையாளர்கள் என 21 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.