அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவு!

 

அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய மூவாயிரம் ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவு அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று புதன்கிழமை (16.10.2024) வைப்பிலிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத் திணைக்களம் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.

எதிர்வரும்- 18 ஆம் திகதி முதல் தபால் அலுவலகங்கள் மற்றும் உப தபால் அலுவலகங்கள் ஊடாகப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவான மூவாயிரம் ரூபா வழங்கப்படாமை தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதற்கான பணத்தைத் திறைசேரியிலிருந்து வழங்குமாறு அண்மையில் ஆலோசனை வழங்கியிருந்தார்.இதற்கிணங்க, தேவையான நிதி திறைசேரியிலிருந்து ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.