சுன்னாகம் பொதுநூலகத்தில் முத்திரைக் கண்காட்சி

தேசியவாசிப்பு மாதத்தை முன்னிட்டுச் சுன்னாகம் பொதுநூலகம் ஏற்பாடு செய்துள்ள முத்திரைக் கண்காட்சியும் விற்பனையும் நாளை வெள்ளிக்கிழமை (18.10.2024) முற்பகல்-10 மணிக்குச் சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.  

குறித்த முத்திரைக் கண்காட்சி நாளையும், நாளை மறுதினம் சனிக்கிழமையும் (19.10.2024) முற்பகல்-10 மணி தொடக்கம் மாலை-04 மணி வரை சுன்னாகம் பொதுநூலக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. எனவே, கண்காட்சியில் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு சுன்னாகம் பொதுநூலக  நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர்.