சித்திர முத்திரைகள் ஓவிய, கைவினைப் பொருட்களின் கண்காட்சி

திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் ' சித்திர முத்திரைகள்' என்னும் ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமை (18.10.2024) தொடக்கம் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை தினமும் காலை-09 மணி முதல் மாலை-04 மணி வரை இல.128, டேவிற் வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

கலைத்தூது அழகியல் கல்லூரியில் சித்திரப் பாடத்தையும், ஏனைய நுண்கலைப் பாடங்களையும் பயில்கின்ற மாணவர்களது ஆற்றல்களை வெளிக்கொணரும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுக் கடந்த பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற இக் கண்காட்சி இம்முறை எட்டாவது தடவையாக இடம்பெறுகின்றது. 

இக் கண்காட்சியில் அயல் பாடசாலைகளில் சித்திரபாடத்தைப் பயில்கின்ற மாணவர்களது ஓவிய,கைவினைப் பொருட்களும் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 'சித்திர முத்திரைகள்' கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காலை-09.30 மணியளவில் இடம்பெறும். இதன்போது சித்திரப் பாட ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி.ஜெயராணி அம்பலவாணர் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.